டுவிட்டர் தலைமை பதவியில் இருந்து விலகினாரா எலன் மஸ்க்?

டுவிட்டர் தலைமை பதவியில் இருந்து எலன் மஸ்க் அவர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்து விலகி இருக்கிறார்.;

Update: 2022-12-23 02:24 GMT

உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். குறிப்பாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று பிறகு, அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார். நிறுவனத்தின் செலவு கருதி பல்வேறு நபர்களை வேளையில் இருந்து தூக்கி இருக்கிறார். செலவினங்களை குறைக்க பல்வேறு நபர்களை வேலையில் இருந்து பணி நீக்கம் செய்து இருக்கிறார். சுமார் 50 சதவீத ஊழியர்களை ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய பணியில் இருந்து பணி நீக்கம் செய்திருக்கிறது.


மேலும் நிறுவனத்தில் பல மாற்றங்களை இவர் கொண்டு வந்து இருந்தார். குறிப்பாக ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் என்ற ஒரு கான்செப்ட்டை கொண்டு வந்தவரும் இவர்தான். இதன் காரணமாக, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தன் தொடர வேண்டுமா? என்று ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் ஒன்று புள்ளி ஏழு கோடி பேர் பங்கேற்று இந்த கருத்துக்கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் என்றும் 57.50 சதவீதம் பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 42.5% பேர் பதவியில் தொடரலாம் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்கள்.


பெரும்பாலானோர் பதவி விலக வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் தற்போது பொறுப்பிலிருந்து விலகுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக எலன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த பதவிக்கு ஒரு முட்டாள் தனமான நபரை தேடிப் பிடித்து விட்டு ராஜினாமா செய்தேன். அதன் பிறகு மென்பொருள், சர்வர் பணிகளை மட்டுமே ஏற்று நடத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News