வருங்கால நலன் கருதி நாசா துவங்க உள்ள எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி !

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்பொழுது எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி பரிசோதனையை துவங்கி உள்ளது. எனவே இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2021-09-04 13:53 GMT

உலகளவில் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் சவாலாக இருக்கின்றன. இதனால், உலக நாடுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வும், விற்பனையும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸியை சோதனையை தொடங்கியிருக்கிறது. நாசா தனது அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டின் ஒரு பகுதியாக தேசிய ஆட்வான்ஸ்ட் ஏர் மொபிலிட்டி திட்டத்தை இப்பொழுது மேற்கொண்டுள்ளது. 


அத்திட்டத்தின் கீழ் தான் ஏர் டேக்ஸி பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த ஏர் டேக்ஸி evtol என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனத்தை கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்யேக விமானத் தளத்தில் நாசா பரிசோதனை செய்துள்ளது. முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்தது. அடுத்தடுத்தக் கட்டங்கள் பரிசோதனையும் வெற்றி பெற்றால் evtol எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தாக இருக்கும் என நம்பப்படுகிறது. 


நாசாவின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திட்ட மேலாளர் டேவிஸ் ஹேக்கன்பெர்க் கூறியுள்ளார். இந்த முயற்சி முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பேக்கேஜ் டெலிவரி, ஏர் டேக்ஸி, மருத்துவ ஆம்புலன்ஸ் எனப் பல்வேறு வகையிலும் இதைப் பயன்படுத்தலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

Input:https://www.space.com/nasa-testing-electric-air-taxi?jwsource=cl

Image courtesy: space News



Tags:    

Similar News