2 ஆயிரம் கோடி ரூபாய் கோவில் சொத்தில் 2 கோடியை மட்டுமே மீட்ட அறநிலையத்துறை!
பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக காலைக்கதிர் ஊடகத்தில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனை மீட்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, ஓமலுார் அருகே, பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, செல்லப்பிள்ளை குட்டையில், சேலம், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவி, தாசில்தார் தமிழ்முல்லை தலைமையில் சுகவனேஸ்வரர் கோவில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, 8 ஏக்கரில் இருந்த, 2 கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சுவாதீனம் எடுத்துக்கொண்டனர்.