Fake News பரப்பியதைப் பற்றி பீற்றிக் கொண்ட உபிக்கள் - ஸ்டாலின் பொய்களின் குட்டு உடைந்தது!

Update: 2021-04-04 01:30 GMT

திமுக பொய்யின் மறுவடிவம் என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை நாட்களாக மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசைப் பற்றியும் மத்தியில் ஆளும் பாஜக அரசைப் பற்றியும் புரளிகளைப் பரப்பும் பணியை உடன் பிறப்புகள் செவ்வனே செய்து வந்தனர். குறிப்பாக பிரதமர் மோடி பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி மக்கள் மனதில் ஒரு காரணமற்ற வெறுப்பை உண்டாக்கி வைத்துள்ளனர்.


இதை பயன்படுத்தித் தான் கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இப்போதைய சட்டமன்றத் தேர்தலையும் இதே முறையில் தான் வெல்ல முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் போஸ்டர்களை போட்டோஷாப் செய்து பொய்த் தகவல்களை உண்மை போல் உபிக்கள் பரப்பி வந்தனர்.

இதை அவர்களே தங்கள் வாயால் ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல், அது பற்றி பெருமையாக வேறு பீற்றிக் கொண்டதைப் பார்க்க முடிகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற பெயர் தக்ஷிண பிரதேசம் என்று மாற்றப்படும் என்று ஒரு போலி போஸ்டர் வலம் வந்தது. இதை வடிவமைத்து உபி தான் தனது செயலை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டார். இதற்கு சக உபிக்கள் சபாஷ் போடுவதை வேறு பார்க்க முடிகிறது.

இப்படி பொய்யான தகவல்களை பரப்பி எப்போதும் தமிழகத்தை ஒரு‌ அமைதியற்ற பதற்றமான சூழலில் வைத்திருப்பது தான் திமுகவின் நோக்கம். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். விவாசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும், உரிமைகள் உரிக்கப்படும் என்று இந்த உபிக்கள் போல் அவரும் அள்ளி விட்டிருக்கிறார்.


குட்டையை வேண்டுமென்றே குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது தானே திமுகவின் வழக்கம். ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பொது மக்களைத் தான் பாதிக்கப் போகின்றன. இதை மனதில் வைத்து மக்கள் திமுகவை மீண்டும் நிராகரிக்க வேண்டும்.

Tags:    

Similar News