"மணல் கொள்ளையர்களிடமிருந்து கல்லணையை காப்பாற்றுங்கள்" - போராட்ட களத்தில் இறங்கிய விவசாயிகள்

அனுமதிக்க படாத இடங்களில் மணல் கொள்ளை அதிகமாக நடப்பதாக விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்.

Update: 2023-01-02 00:32 GMT

கொள்ளிடம் ஆற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான அளவில் மணல் அள்ளுவதாகவும், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆற்றில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி நேற்று முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வீரமாங்குடி, மரூர், சாத்தனூர் இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்படுகிறது.


இந்த குவாரிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இல்லாமல் பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்படுகிறதாக குற்றச்சாட்டு தற்போது எழுந்து இருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பற்றிக் குறை ஏற்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தங்களுடைய கஷ்டத்தை கூறி இருக்கிறார்கள். நேற்று முதல் போராட்டத்தில் இறங்கி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.


இது குறித்து திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் காவேரி பாசன சமூக செயற்பாட்டாளர் அவர்கள் கூறுகையில், கல்லணை அருகே சாத்தூர் குமாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் கல்லணைக்கு ஆபத்து ஏற்படலாம். மாவட்டங்களில் நீர் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் மிகவும் கேள்விக்குறியாக மாறும் ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே கல்லணையில் இருந்து அணைக்கரை வரை 50க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் பல மாவட்டங்கள் குடிநீர் மண்டலாக அறிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டி இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News