பறக்கும் காருக்கு முதலில் அனுமதி வழங்கும் நாடு: ஆட்டோமொபைல் துறையில் நடக்கும் புரட்சி !

உலகில் முதல் முறையாக பறக்கும் கார்களுக்கு அனுமதி வழங்கிய ஜப்பான் அரசாங்கம்.

Update: 2021-11-07 14:19 GMT

உலகம் முழுவதிலும் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புரட்சிகள் அரங்கேறி வருகின்றன. 50 வருடங்களுக்கு முன்பு புகையே வெளியிடாத, பெட்ரோல், டீசல் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் வெளிவரவுள்ளன என்றால் நம்மில் எத்தனை பேர் நம்பியிருப்போம் என்பது தெரியவில்லை. ஆனாலும் இன்று அது சாத்தியமாகி வருகிறது. இவ்வாறு எதிர்காலத்தில் சாலைகளில் பறக்கும் வாகனங்கள் ஆக்கிரமிப்பதற்கும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலையினை உலகம் அடைய இன்னும் நீண்ட வருடங்களுக்கு காத்திருக்க வேண்டியதாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்கை ட்ரைவ் இதற்கான முயற்சிகளில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.


உலகிலேயே முதல்முறையாக பறக்கும் கார் ஒன்றிற்கு பாதுகாப்பு சான்றிதழை வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன்படி, சமீபத்தில் eVTOL என்ற பறக்கும் கார் கான்செப்ட்டை ஸ்கை ட்ரைவ் வெளியீடு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பறக்கும் காருக்கான அனுமதி சான்றிதழை ஜப்பான் அரசு வழங்கியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தால் இந்த கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு பறக்கும் கார்களை உருவாக்க முடியும்.


தற்போதைக்கு இந்த பறக்கும் காரினை 10 நிமிடங்களுக்கு மட்டுமே பறக்க வைக்க முடியும் என கூறும் ஸ்கை ட்ரைவ் தற்போது பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துள்ளதால் இதன் மூலமாக நீண்ட நேரத்திற்கு பறக்கக்கூடிய வகையில் இதனை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போதைக்கு இந்த பறக்கும் வாகனம் 30 கிலோ வரையிலான எடையினை மட்டுமே சுமந்து பறக்கக்கூடியதாக உள்ளது. 

Input & Image courtesy:Iflscience


 


Tags:    

Similar News