பிப்ரவரி 2021 முதல் நடைமுறைக்கு வர உள்ள வாட்ஸ் அப் இன் புதிய விதிமுறைகளை பின்பற்றி தான் ஆக வேண்டும்.!

பிப்ரவரி 2021 முதல் நடைமுறைக்கு வர உள்ள வாட்ஸ் அப் இன் புதிய விதிமுறைகளை பின்பற்றி தான் ஆக வேண்டும்.!;

Update: 2020-12-04 18:45 GMT

வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். அதற்குப் பிறகு, வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்துபவர்கள் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியும். Wabetainfo  அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. 

அடுத்த ஆண்டு முதல் புதிய தனியுரிமைக் கொள்கையை நிறுவனம் ஏற்காவிட்டால்  வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்துபவர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை அணுக முடியாது. அதாவது, நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட கொள்கையில் உபயோகப்படுத்துபவர்க்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், கணக்கை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை. வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை 20 பிப்ரவரி 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

webetainfo வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டது. உபயோகப்படுத்துபவர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவர்களின் கணக்கை நீக்க வேண்டும் என்று அது தெளிவாகக் கூறுகிறது. வாட்ஸ்அப் சேவை தொடர்பான கூடுதல் தகவல்கள் அப்டேட் உடன் கிடைக்கும் என்றும் அது கூறுகிறது.

கூடுதலாக, நிறுவனம் உபயோகப்படுத்துபவர்கள் விவரங்களை எவ்வாறு செயலாக்குகிறது என்பதையும் இது விளக்கும். பேஸ்புக் ஹோஸ்ட் செய்த சேவைகளின் சாட்டுகள், வணிகம் எவ்வாறு சேமிக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது என்பது பற்றிய தகவலையும் இது வழங்கும்.

வாட்ஸ்அப், புதிய கொள்கையை செயல்படுத்தும் தேதியை மாற்றவும் கூடும். WABetaInfo பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில், புதுப்பிக்கப்பட்ட கொள்கையை செயல்படுத்தும் தேதி மாற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.  வாட்ஸ்அப் என்ன மாதிரியான கொள்கைகளைக் கொண்டு வரப்போகிறது, புதிய அம்சங்கள் என்னென்ன இருக்கப்போகிறது, வாட்ஸ்அப் விளம்பரமயம் ஆக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பொறுத்திருந்து தான் பதில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Similar News