உயிர்வாழ இது மிகவும் இன்றியமையாதது: வீடியோ மூலம் கருத்து கூறிய வனத்துறை அதிகாரி!

அனைத்து உயிர்களும் உயிர் வாழ தண்ணீர் இன்றியமையாத தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

Update: 2022-01-08 14:04 GMT

இந்த உலகில் ஒவ்வொரு உயிர்களும் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாததாக தண்ணீர் உள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில், தற்பொழுது வனத்துறை அதிகாரி அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்கினங்களும் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே விலங்கினங்களுக்கும் தண்ணீர் தரும் நபர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  


வனத்துறை அதிகாரியாக சுசந்தா நந்தா எப்போதும் சமூக வலைத்தளங்களில் வனவிலங்கு சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த வீடியோவில், முள்ளம்பன்றி ஒன்று தாகத்தால் தவித்து கொண்டிருக்கிறது அருகில் இருந்த நபர்கள் அவற்றின் தாகத்தை தணிக்கும் பொருட்டு தன்னுடைய வாட்டர் பாட்டில் உள்ள தண்ணீரை கொடுக்கிறார்கள். தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள் ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். 


உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்களில் இவற்றுள் ஒன்று. அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும். ஒருவர் உயிர்வாழ சில துளிகள் தண்ணீர் மட்டுமே தேவை. அதை வழங்க ஒருவராக இருங்கள் நீங்கள் என்ற அவர் பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 

Input & Image courtesy: News 18



Tags:    

Similar News