சுமார் 132 டன் எடை கொண்ட கிரானைட் பாறை பிரான்ஸில் கண்டுபிடிப்பு!
பிரான்ஸ் நாட்டில் 132 டன் எடை கொண்ட அரியவகை கிரானைட் பாறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹுயல்கோட் என்ற வனத்தில் இருக்கும் டிரம்பிளிங் ஸ்டோன் மிகவும் பிரபலமானது. இது ஒரு கிரானைட் பாறை ஆகும். இதன் எடை 132 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாறையின் சிறப்பம்சமே, இது இவ்வளவு எடை கொண்டிருந்தாலும் எல்லா மனிதர்களாலும் எளிதாக அசைக்க முடிவது தான். மிகவும் பலவீனமான நபர்களால் கூட இந்த 132 டன் எடை கொண்ட பாறையை சுலபமாக அசைக்க முடியும். எப்படி பலவீனமானவர்கள் இந்த பாறையை அசைக்க முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள்? ஆம் இது உண்மைதான்.
இது அமைந்துள்ள பகுதி முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்ததாக உள்ளது. இந்தப் பாறை ஒரு தட்டையான கல் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறையின் நடுப்பகுதி மட்டும் பேலன்ஸ் செய்யப்படுகிறது. இதன் முனைகள் அப்படியே விடப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பாறையின் எந்தப் பக்கத்தைத் தொட்டாலும், இது மேலும் கீழுமாக ஆடும். எனவே இது பிரான்சில் ஏற்கனவே மிகவும் பிரபலமடைந்த ஒன்றாகும். இதைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் நிறைய பயணிகள் அந்த இடத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இது போன்று பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால் இல்லை தமிழகத்திலும் இதுபோன்ற பாறைகள் உள்ளது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் பாறை தான் அது. இந்த பாறைக்கு வெண்ணைப் பந்து என்ற பெயர் சூட்டப்பட்டது. இதை லேசாக தொட்டாலே நகர்வது போன்ற தெரியும். ஆனால் உண்மையில் இது நகராது, சுமார் 1300 ஆண்டுகள் மிகவும் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News18