G-20 தலைமையில் முக்கியத்துவம் பெறும் ஆயுஸ் அமைச்சகம்.. இந்தியாவின் அசத்தல் செயல்..

Update: 2023-07-25 02:41 GMT

சுகாதாரம் குறித்த G-20 விவாதத்தில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் பாரம்பரிய மருத்துவத்தை முன்னணியில் கொண்டு வந்துள்ளன என்றும், சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை ஜி-20 அங்கீகரிக்கும் என்றும் புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 ஈடுபாட்டுக் குழுக்களுடனான கலந்துரையாடலில், உறுப்பினர்கள் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர். பாரம்பரிய மருத்துவம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கியத்தின் ஆதாரமாக உள்ளது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஜி-20 ஷெர்பா அமிதாப் காந்த், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அபய் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதில் ஆயுஷ் நடைமுறைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒரு பிரத்யேக உலக சுகாதார மையத்தை உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் கொண்டு வந்துள்ளது என்றும், இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்தின் திறனைப் பயன்படுத்தும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.


பாரம்பரிய மருத்துவத் துறையில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் மூலம் பங்களித்த பணிக்குழுக்களை வைத்யா ராஜேஷ் கோட்டேச்சார் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ், ஆயுஷ் அமைச்சகத்தின் பங்களிப்பை பகிர்ந்து கொள்வதே முக்கிய நோக்கம் என்றும், அது வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News