G20 மாநாட்டிற்கு வருகை தந்த சர்வதேச தலைவர்கள்.. பிரதமர் மோடியின் சிறப்பான உபசரிப்பு..
இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் G20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். ஒவ்வொரு தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் வரவேற்று அவர்களுக்கு சிறப்பான முறையில் உபசரிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மொரீஷியஸ் பிரதமரை வரவேற்று மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு, "எனது நண்பர் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தை இந்தியாவுக்கு வரவேற்கிறேன், இன்று எங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார். சர்வதேச நிதியத்தின் மேலாண்மை இயக்குநரை வரவேற்று, பிரதமர் கூறியிருப்பதாவது, "கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறியிருப்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது காலத்தின் நெருக்கடியான சவால்களைத் தணித்து, நமது இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வோம். நீங்கள் தில்லிக்கு வந்தபோது எங்கள் கலாச்சாரத்தின் மீது காட்டிய அன்பையும் நான் பாராட்டுகிறேன்" என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரை வரவேற்று, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "G20 உச்சி மாநாட்டிற்காக தில்லியில் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, உர்சுலா வான் டெர் லேயன். ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி. கூட்டாக, நாம் எதிர்கொள்ளும் அழுத்தமான சவால்களை எதிர்கொள்வோம். பயனுள்ள விவாதங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறேன். இங்கிலாந்து பிரதமரை வரவேற்று மோடி அவர்கள் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு, "வருக ரிஷி சுனக், ஒரு சிறந்த பூமிக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஒரு பயனுள்ள உச்சிமாநாட்டை எதிர்நோக்குகிறேன்".
ஸ்பெயின் தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், ஸ்பெயின் அதிபரிடம் உரையாற்றினார், "நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் பெட்ரோ சான்செஸ். வரவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் போது உங்கள் ஆழமான கருத்துக்களை நாங்கள் தவறவிடலாம். அதே நேரத்தில், இந்தியா வந்துள்ள ஸ்பெயின் தூதுக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: News