ககன்யான் திட்டம் என்ஜின் சோதனை: இஸ்ரோ வெற்றிகரம்!

ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின்கள் சோதனை வெற்றிகரம்.

Update: 2022-10-31 03:37 GMT

பனங்குடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோ ஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக இஸ்ரோ நடத்த இருக்கிறது.நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டிய மகேந்திர கிரியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரோஜெனிகா என்ஜின்களின் சோதனை நடைபெறுகிறது. இங்கு கங்கன்யான் திட்டத்திற்காக அதாவது விண்ணில் மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் பொருளான கிரையோஜனிக் இன்ஜின் பரிசோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


ககன்யான் திட்டம் என்பது விண்வெளியில் மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இந்த திட்டத்தை இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்திட்டத்திற்காக பல்வேறு விஞ்ஞானிகளும் தங்களுடைய முழு ஈடுபாட்டை காண்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் மகேந்திரா கிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரோஜெனிக் என்ஜின் 11, எம்கே 33 பரிசோதனை நேற்று முன்தினம் நடைபெற்றது.


சுமார் 25 வினாடிகள் நீடித்த இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையானது மகேந்திர கிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தின் இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News