ட்விட்டர் நிறுவனம் நீக்கியவர்களை இழுக்கும் 'கூ' நிறுவனம் - பலம் பெரும் 'கூ'
ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை கூ நிறுவனம் வரவேற்கிறது.;
ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை கூ நிறுவனம் வரவேற்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஊடக நிறுவனமான கூ நிறுவனத்தில் ட்விட்டரில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை சேர்த்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில் செலவுகளை குறைக்கும் முயற்சியில் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் கடுமையாக பணியாற்ற விரும்புவர் மட்டும் நீடிக்கலாம் மற்றவர்கள் விலகிச் செல்லுங்கள் எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பலர் தன் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக கூ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கூ நிறுவனம் தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.