வருடத்திற்கு 1 காச நோயாளியை தத்தெடுக்கலாமே: மோடியின் பிறந்த நாளில் நல்லெண்ண ஏற்பாடுகள்!

பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நல்லெண்ண ஏற்பாடுகள் பா.ஜ.க நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Update: 2022-09-04 02:57 GMT

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. பிரதமர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை பா.ஜ.க கட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நல்லெண்ண ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. பிரதமர் அவர்களின் முக்கியமான பிரச்சாரமாக 2025 க்குள் இந்தியாவில் முழுவதுமாக காச நோயாளிகளை இல்லாத நாடாக உருவாக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துள்ளார். அதற்காக தற்போது பா.ஜ.க நிர்வாகம் சார்பில் வருடத்திற்கு ஒரு காசநோயாளிகளை தத்தெடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.


மேலும் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள பயனாளிகள் பிரதமருக்கு, வாழ்த்து கடிதம் அனுப்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆளுமை மற்றும் நிர்வாக திறமைகள் பற்றிய கண்காட்சி மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுவதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடையே, நேர்மறையான சேவை எண்ணங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பா.ஜ.க தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மண்டலத்திலும் ரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரத்ததான முகாம்களை சிறப்பாக ஏற்பாடு செய்து, முகாமில் பயனடைந்த பயனாளர்களின் எண்ணிக்கை பொருத்த சிறப்பாக பங்காற்றிய 10 தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரம் வளர்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நமோ(NAMO) செயலி வழியாக பதிவிடலாம் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News