பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது: கூகுள் CEO சுந்தர் பிச்சை!
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளருவதாக கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்து இருக்கிறார். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்பொழுது சுந்தர் பிச்சை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் CEO சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள twitter பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகவும் சிறந்ததாக அமைந்து இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சந்திப்பிற்கு நன்றி எனவும் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் நான் பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர் நோக்குகிறேன்.
வலிமையான நமது கூட்டுத் தொடர்வதை நான் எதிர்பார்க்கிறேன். G-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இருப்பதற்கு நாம் எங்கள் தரப்பில் இருந்து முழுமையான ஆதரவு வழங்கப்படும்" இவ்வாறு அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News