காவேரிப்பட்டினத்தில் அற்ப காரணத்திற்காக உருட்டு கட்டைகளை வைத்து தாக்கிக்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள், ஏன்?

காவேரிப்பட்டணம் அடுத்த பாலக்கோடு சாலை சந்தை நடைபெறும் இடத்தில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் கும்பலாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-05-22 06:30 GMT

காவேரிப்பட்டணம் அடுத்த பாலக்கோடு சாலை சந்தை நடைபெறும் இடத்தில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் கும்பலாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரை அடிக்கப்பாய்வதும், மேஜை நாற்காலிகளை உடைப்பதும், பொதுவெளியில் அடைத்துக் கொள்வதும், மதுபானம் அருந்திவிட்டு செல்வதுமாக வீடியோக்கள் பரவி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி புதூர் அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் தற்பொழுது காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் கும்பலாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அந்த தாக்குதலின் இடையில் ஒரு மாணவன் 10 அடி நீளம் கொண்ட கட்டைகள் வைத்து சக மாணவர்களை தாக்குவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது, பள்ளியில் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது சம்பவம் கடந்த மே 17ஆம் தேதி அன்று நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு நின்றிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு முறையான கவுன்சலிங் மற்றும் கல்வி முறைகள் கொடுத்தால் ஏற்பட்ட விளைவு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Source - Maalai Malar

Similar News