தமிழக அரசு பள்ளியில் மாதா சிலை: மதமாற்றம் முயற்சியை ஊக்குவிக்கிறதா பள்ளிக்கல்வித்துறை

தமிழக அரசு பள்ளியில் மாதா சிலை மதமாற்றத்தின் முயற்சியாக பார்க்கப்படுவதாக இந்து முன்னணி போராடி மீட்பு.

Update: 2022-11-30 13:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சந்தோஷ்புரத்தில் அமைந்துள்ளது தான் ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியின் சுற்று சுவரில் தற்பொழுது மாதா சிலை ஒன்று அமைந்து இருக்கிறது. இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் அரசு பள்ளிகளில் ஏன் மாதா சிலை வைக்கப்பட்டு இருக்கிறது? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இந்து முன்னணி சார்பில் மாதா சிலையை அகற்றக்கோரி கல்வி துறைக்கும், காவல்துறைக்கும் மனு ஒன்று அளித்து இருக்கிறார்கள்.


செங்கல்பட்டு மாவட்டம் சந்தோஷபுரம் ஒன்றிய நடுநிலைப் மதில் சுவரில் மாதா சிலையை மதமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள் இந்து முன்னணி அமைப்பினர். மேலும் அவர்கள் சார்பில் மனு ஒன்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்துமுன்னணி மாதா சிலையை அகற்ற கோரிய மனு தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. 



தி.மு.க ஆட்சியில் பல்வேறு அரசு பள்ளிகளில் நிர்வாகம் தற்பொழுது சீர் குலைந்து வருகின்றது. அந்த வகையில் அரசு பள்ளியில் ஏன் மாதா சிலை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது? என்று தெரியவில்லை என கூறி இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்துமுன்னணி மாதா சிலையை அகற்ற கோரி கல்வித்துறைக்கும் காவல்துறைக்கும் மனு கொடுத்ததின் அடிப்படையில் சிலை அகற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News