அதிக எரிபொருள் விலை: GST கீழ் பெட்ரோலிய பொருட்கள் வருகிறதா?
அதிக எரிபொருள் விலை காரணமாக நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதிக எரிபொருள் விலையில் இருந்து நுகர்வோர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வரும் மாதங்களில் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை இன்று தெரிவித்தார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவை GST கவுன்சில் எடுத்துக்கொண்டது. ஆனால் அது 'சாதகமாக இல்லை' என்றும் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை பூர்த்தி செய்ய வெளிநாட்டு கொள்முதலை நம்பியுள்ளது. இது ஆசியாவில் அதிக எண்ணெய் விலைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்குப் பதிலளித்த அமைச்சர் அவர்கள், பெட்ரோலியப் பொருட்கள் GSTயின் கீழ் கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். "பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் மதுபானங்களை GSTயின் கீழ் சேர்த்தால், இந்த இரண்டு மூலங்களிலிருந்தும் தங்கள் வருவாயைக் குறைக்கத் தயங்குகின்றன" என்று பெட்ரோலிய அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும் நுகர்வோருக்கு எங்களால் இயன்ற அளவிற்கு நிவாரணம் கிடைப்பதை உறுதிசெய்ய, வரும் மாதங்களில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் கூறினார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசாங்கம் நீக்கியிருந்தாலும், இந்தியன் ஆயில் கார்ப் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் கடந்த காலங்களில் விலை மாற்றங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
Input & Image courtesy: Swarajya News