GST கவுன்சிலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. ஆன்லைன் ரம்மிக்கு கடும் கட்டுப்பாடு..
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 51 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதுதில்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வதுகூட்டத்தில் சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் குறித்த அமைச்சர்கள் குழுவின் (GOM) இரண்டாவது அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு முடிவு கட்டும் நோக்கில் அவற்றின் மீது ஜிஎஸ்டி அதிகமாக விதிக்கப்படுவது அனைத்து தரப்பிலிருந்து வரவேற்கப்பட்டது.
சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமைகோரல்களுக்கு முழு முக மதிப்பில் 28% வரி விதிக்கலாம் என்று இக்குழு பரிந்துரைத்தது. திறமைக்கான விளையாட்டா அல்லது விருப்பப்பட்ட விளையாட்டா என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என்றும் கவுன்சில் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் தனது 51 வது கூட்டத்தில், சூதாட்டங்கள், குதிரைபந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சி.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ன் அட்டவணை 3-ல் திருத்தம் உட்பட சி.ஜி.எஸ்.டி சட்டம் 2017, IGSTசட்டம் 2017 ஆகியவற்றில் சில திருத்தங்களை பரிந்துரைத்தது.
IGST சட்டம், 2017-ல் ஒரு குறிப்பிட்ட விதியை சேர்க்க கவுன்சில் பரிந்துரைத்தது. இது இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு சப்ளையர் இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கு ஆன்லைன் பண கேமிங்கை வழங்குவதில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கும் பரிந்துரை செய்தது. பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்துதல் விதிகளுக்கு இணங்கத் தவறினால், அத்தகைய வழங்குநரால் ஆன்லைன் பண கேமிங்கை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கணினிப் பொறியிலும் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது ஆதரவளிக்கப்பட்ட அதனை முடக்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளது.
Input & Image courtesy: News