கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற உலகின் மிக உயரமான சைக்கிள் பயணி!
உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற மிக உயரமான சைக்கிள் கண்டுபிடிப்பு மற்றும் அதனை உருவாக்கிய நபரின் பயணம்.
உலகில் உள்ள அனைவருமே உலக கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விதமான சாதனைகள் மற்றும் முயற்சிகளையும் செய்து அந்த புத்தகத்தில் இடம் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆடம் ஸ்டானோவிச் என்ற நபர் தன்னுடைய வித்தியாசமான உலகிலேயே மிக உயரமான சைக்கிள் கண்டுபிடிப்பின் மூலமாக அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஆடம் எப்பொழுதும் எதையும் பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ஒருவராம். அதனால் அவருடைய சைக்கிளை மறுசுழற்சி செய்யும் பொருட்கள் மூலமாக மிகப்பெரிய அளவில் தயாரித்து உள்ளார்.
மேல் அவர் கண்டுபிடித்த உலகின் மிக உயரமான சைக்கிளை ஓட்டிச் செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதன் பின் அந்த சாதனை தற்பொழுது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆடம் ஸ்டானோவிச். இன்ஸ்டாகிராம் பதிவில் ஆடம் 7.41 மீட்டர் உயரம் கொண்ட சைக்கிள் என்ற கேப்ஷனிங் அவருடைய வீடியோவில் போட்டுள்ளார். இதுவே அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பொதுவாக சாதாரண சைக்கிளில் பேலன்ஸ் என்பது அவ்வளவு சுலபமாக வந்துவிடாது. மிகப்பெரிய உயரம் கொண்ட சைக்கிளில் இதை செய்வதும் சுலபமான காரியமல்ல. இதைப்பற்றி அவர் கூறுகையில், இதனை உருவாக்குவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவற்றை கச்சிதமாக ஓட்டுவதற்கு சில மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 57,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்ற வீடியோ தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது.
Input & Image courtesy: News 18