கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்: உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்டாபெர்ரி!
உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெரி தற்பொழுது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது சாதனைகளைப் புரிந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தான் அவர்களை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கின்றது. குறிப்பாக ஒருவரிடம் இருக்கும் திறமைகளை முதலில் கண்டு கண்டுபிடிப்பதுதான் இதற்கு அச்சாணி. பிறகு அந்த திறமையை முழுமையாகப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு செயலை நிகழ்த்த வேண்டும். அந்த வகையில் தற்பொழுது கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனுடைய பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு விவசாயி தான் இந்த ஸ்ட்ராபெரி விளைச்சலுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவருடைய விளை நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெரி தான் உலகில் அதிக எடையுள்ள ஸ்ட்ராபெரி என்ற புகழையும் பெற்றுள்ளது. இஸ்ரேலின் கடிமா-சோரானில் அமைந்துள்ள ஏரியலின் என்பவருக்கு சொந்தமான ஸ்ட்ராபெரி தோட்டம். ஸ்ட்ராபெர்ரி இன் தி ஃபீல்ட் என்ற பண்ணையில் தனது குடும்ப தொழிலான ஸ்ட்ராபெரி வளர்ப்பை ஏரியல் என்ற விவசாயி செய்து வருகிறார்.தனது பண்ணையில் இலான் வகை ஸ்ட்ராபெரியை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இந்த வகை ஸ்ட்ராபெரி டெல்-அவிவ் அருகே பெட்-தாகன் பகுதியில் உள்ள இஸ்ரேல் விவசாய ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளரான நிர் டாயால் என்பவரால் முதன் முறையாக வளர்க்கப்பட்டது.
இந்த வகையான ஸ்டாபெரிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவர் தன்னுடைய பண்ணையில் இந்தவகையான ஸ்டாபெர்ரிகளை பயிரிட்டு வெற்றி அடைந்து உள்ளார். ஸ்ட்ராபெரி செடிகளில் ஒன்று சுமார் 289 கிராம் எடையுள்ள ராட்சத ஸ்ட்ராபெரியை உற்பத்தி செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 சென்டிமீட்டர் நீளம், 4 சென்டிமீட்டர் தடிமன் மற்றும் 34 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஸ்டாபெர்ரி உலகிலேயே மிக அதிக எடை கொண்ட ஸ்டாபெர்ரி என்ற பெயரில் இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
Input & Image courtesy: News 18