மதுரையில் வன்முறை பிரச்சாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர்களை வலை வீசி தேடும் காவல்துறை!
hijab-case-case-filed-against-3-persons-for-making-death-threats-to-judges-in-madurai;
கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வன்முறையை தூண்டும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலதணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
இந்த வீடியோவை பகிர்ந்து, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக, மாநிலதணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய மூன்று பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.