நெற்றியில் திலகமிட்டு பள்ளிக்கு வந்த மாணவியை தாக்கிய ஆசிரியர் நிசார் அகமது! பெற்றோரின் கதறல் வீடியோ!

Hindu girl student thrashed by govt. school teacher Nisar Ahmed for wearing Tilak to school during Navratri

Update: 2022-04-06 07:57 GMT

காஷ்மீரில் மைனர் மாணவியை உடல் ரீதியாக தாக்கியதற்காக பள்ளி ஆசிரியர் நிசார் அகமது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் வைத்து பூஜை முடிந்து நெற்றியில் திலகமிட்டு பள்ளிக்கு வந்த மாணவியை தாக்கியதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர் .

தங்கள் மகளை பள்ளி ஆசிரியர் இரக்கமின்றி தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆசிரியர் அகமது மாணவியை திட்ட இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், இந்துக்களின் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


பள்ளி ஆசிரியருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஜோரி கூடுதல் துணை ஆணையர் சச்சின் தேவ் சிங், விசாரணை முடியும் வரை ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ரிபப்ளிக் டிவியிடம் பேசிய சிறுமியின் தந்தை ஆங்ரேஸ் சிங், "அரசு நடுநிலைப் பள்ளியில் இதுபோன்ற சம்பவம் மதத்தின் பெயரால் தொடர்ந்தால், நாம் அனைவரும் சேர்ந்து போராட நேரிடும்" என்று கூறினார்.

தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை பற்றி செய்தியாளர் சந்திப்பை நடத்திய பின்னரே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிசார் அகமது இரண்டு பள்ளிச் சிறுமிகளை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், இருப்பினும் அந்த அறிக்கையில் இரண்டு பள்ளிச் சிறுமிகளை அடித்ததற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

Similar News