மதமாற்ற நோட்டீஸ் கொடுத்தவர்கள் மீது இந்து முன்னணி விபூதி பூசியதால் பரபரப்பு!

மதம் மாற்றும் முயற்சியில் கிறிஸ்துவர்கள் நோட்டீஸ் கொடுத்ததால், அவர்கள் மீது விபூதியைப் பூசிய இந்து முன்னணியினர்.

Update: 2022-06-10 00:21 GMT

சமீப காலங்களாக மதமாற்ற முயற்சிகள் தற்போது அதிகரித்து வருகிறது. அதில் கிறிஸ்தவர்கள் நோட்டீஸ்கள் கொடுத்து மக்களை மூளை சலவை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதற்காக தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியத்தில் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்கான நோட்டீசை கொடுக்கும் வந்தவர்கள் மீது இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக நேசிக்கின்ற கொலைகாரன்,தெய்வ சத்தம் என்ற தலைப்பில் துண்டு நோட்டீஸ்களை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இது தொடர்பாக உடனடி தகவல்களை அறிந்த இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நீங்கள் எப்படி இந்த நோட்டீசை வழங்கி இந்துக்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்துகிறீர்களா? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அப்படி வந்த கிறித்துவர்களின் மீது இநது முன்னணி அமைப்பினர் விபூதியை பூசினார்கள். இதனால் பதற்றமடைந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிறிஸ்துவர்களின் தகவல்களை எழுதி வாங்கிவிட்டு அவர்களை புகைப்படம் எடுத்து இதுபற்றி விசாரணை எடுத்து வருகிறார்கள். 


குறிப்பாக 20 கிறிஸ்துவர்கள் மொத்தமாக ஒரு வேனில் வந்து இத்தகைய மத மாற்றம் முயற்சியில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது போன்று திருநெல்வேலி கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு தற்போது கள்ளக்குறிச்சியில் இந்து மக்களிடம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவது தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததாக இந்து முன்னணி அமைப்பினர் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News