சிதிலமடைந்து இடிந்து விழக்கூடிய நிலை.. பழங்காலத்து சிவன் கோவில்.. கவனம் கொடுக்குமா HR&CE?

சிதிலமடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே மிகப் பழங்காலத்து சிவன் கோவில்.

Update: 2023-06-03 02:36 GMT

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களில் முக்கவாசி தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை குறிப்பாக கோவில் சொத்துக்களின் நிதி தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. ஆனால் கோவில் நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்களில் சற்று பின்னடைவாக தான் செயல்படுகிறது. கோவில்களில் வரும் வருமானம் மூலமாக கோவில்களுக்கு மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.


ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக கோவில்களின் சொத்துக்கள் மூலமாக எவ்வளவு நன்மைகளை பெறலாமோ அவ்வளவு நன்மைகளை பெறுகிறது. ஆனால் கோவில்கள் நலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்களிலும் தாமதித்து வருகிறதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மழவராயநத்தம் சிவன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


ஸ்ரீவைகுண்டம் அருகே மிகப் பழங்காலத்து சிவன் கோவில் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் இக்கோயில் இருந்து வருகிறது. ஆலயங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து அதன் வருமானத்தை மட்டுமே குறிப்பாக கொண்டு செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை இதுபோன்று பராமரிப்பு இல்லாமல் இருக்கும் ஆலயங்களை அதன் பழமை மாறாமல் புதுப்பித்து மக்கள் தரிசனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News