பாழடைந்த சிவன் கோவில் - கண்டு கொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை!
பாழடைந்து வரும் அகத்தீஸ்வரர் சிவன் கோவில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.
உருத்திர மேரூர் ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது தான் காட்டாங்குளம். இந்த காட்டாங்குளத்தில் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வரும் நிலையில் அகத்தீஸ்வரர் என்று மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு பாழடைந்து விட்டது. எனவே அழிந்து வரும் இந்த சிவன் கோவிலை அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தற்போது கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
இந்து சமய அறநிலைக்கு சொந்தமான மிகவும் பழமையான அகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அகத்தியர் திருத்தலத்தில் ஈசனை வணங்கி, முத்தி நிலையை அடைந்ததால் இந்த சிவனுக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. கோவிலில் இருந்து கொடிமரம், பலிபீடம் மற்றும் உள் சுற்றில் இருந்த சுவாமி சன்னதிகளும் பின்புறத்தில் இருந்த தனித்தனி தெய்வ சன்னதிகளும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து சேதமாகி விட்டது. தற்போது நந்தி சிலை கோவில் வளாகத்தில் வெளியே அமைந்துள்ளது. பல்வேறு கலைநயமிக்க தூண்கள் செய்தமடைந்த நிலையில் உள்ளன.
மிகவும் பிரசித்தி பெற்ற இத்தகைய கோவில்களை இந்து சமநிலையத்துறை அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்திருந்த இந்த கோகுலின் தற்போதைய நிலவில் கண்டு அங்குள்ள பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைகிறார்கள். பராமரிப்பு வேலைகளை இந்து சமநிலை துறை உடனடியாக தொடங்கி, பக்தர்களின் பயன்பாட்டிற்கு இந்த கோவில் வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar