கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை அடித்து நொறுக்கிய கும்பல் - கண்ணாடி கையை கிழித்து கருவறை முழுக்க ரத்தம் - பகீர் வீடியோ காட்சி!

Hindu temple attacked in Noida, Shivling destroyed, property ransacked;

Update: 2022-03-22 09:42 GMT

உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் மார்ச் 21 அன்று இரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இந்து கோவில் அடித்து நொறுக்கப்பட்டது. நொய்டாவில் உள்ள பெஹ்லோல்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பத்திரிக்கையாளர் சச்சின் குப்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கோவில் வளாகத்தில் சாமி சிலைகளின் உடைந்த துண்டுகள் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது. அவர் தனது ட்விட்டர் பதிவில், "சமூக விரோதிகள் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை அழித்துள்ளனர். சிவலிங்கத்தின் அருகே ரத்தம் காணப்பட்டது. அந்த இடத்தில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன" என்றார்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோவிலின் புனிதத்தை மீறியதாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏபிபி பத்திரிக்கையாளர் அங்கித் கௌசிக் வெளியிட்ட வீடியோவில், சிவலிங்கத்தின் சில பகுதிகள் அழிக்கப்பட்டதைக் காண முடிந்தது. கோவில் தரையிலும் ரத்தம் சிதறியிருந்தது.

 சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையை உடைத்ததில் குற்றம் சாட்டப்பட்டவர் காயமடைந்தார் என்று மத்திய நொய்டா டிஜிபி ஹரிஷ் சந்தர் குறிப்பிட்டார்.

"சம்பவத்தின் போது கோவில் பூசாரி பிணைக் கைதியாக வைக்கப்பட்டார் என்ற மற்றொரு வதந்தி தவறானது," என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார். தி இந்து போஸ்ட்டில் ஒரு செய்தியின்படி , கோவிலில் இறைச்சி துண்டுகள் கொட்டப்பட்டதாக கோபமடைந்த கிராம மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.  கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று கோரினர்.

Similar News