ஆஸ்திரேலியா: ஒரே வாரத்தில் 2 முறை இந்து கோவில் மீது தாக்குதல்!
ஆஸ்திரேலியா ஒரே வாரத்தில் இரண்டு முறை இந்து கோவில்கள் மீது விழுந்த தாக்குதல்.
ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வாழும் தமிழர்கள் அதிர்ச்சியான ஒரு மனநிலை தான் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா மெல்போர்னில் நகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் அந்த கோவில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான சித்திரங்களை வரைந்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மறுபடியும் மற்றொரு சம்பவம் அரங்கே இருக்கிறது.
குறிப்பாக மெல்போர்னில் புறநகர் பகுதியான கேரம் பிரவுன்சில் ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் இருக்கிறது. இங்கு காலிஸ்தானி ஆதவாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள். இந்தியாவில் எதிராக பல்வேறு சுவரொட்டிகளை நேற்று அங்கு வைத்திருந்தார்கள். வரலாற்று புகழ்மிக்க இந்து சிவ கோவில்களில் அமெரிக்க வாழ் தமிழர்கள் அதிகம் வருகை தந்து வழிபடுகிறார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த வேலை செய்து அவர்கள் அரங்கேற்று இருக்கிறார்கள்.
குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகை ஒட்டி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த தமிழர்கள் கோவிலில் உள்ள சுவரொட்டிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் இது தொடர்பாக ஆஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் நகரில் விக்டோரியா மாகாண அரசும் கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Times of India