ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க நினைக்கும் மக்கள்?போராளிகளின் செவிகளின் கவனத்திற்கு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மக்கள் மீண்டும் திறக்க நினைக்கிறார்களா?
இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உருக்கும் ஆலை மூடல், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டு தற்பொழுது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய தாமிர ஆலை மற்றும் நாட்டின் மொத்த தாமிர உருக்கும் திறனில் 40 சதவீதத்தை கொண்டுள்ளது. இதனால் பல்வேறு மக்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளார்கள் மற்றும் நாட்டின் வருமானமும் ஒட்டுமொத்தமாக குறைந்து உள்ளது. ஆலை மூடப்பட்டதால் 1.2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் இழந்ததாக தொழில்துறையினர் தெரிவித்தனர். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் என்பதைப் போல தற்போது, ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தூத்துக்குடி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
பெரும்பாலான உள்ளூர்வாசிகள் ஆலையை மூடுவது பிரச்சாரத்தால் உந்தப்பட்டு நடந்திருக்கக் கூடாது என்று தற்பொழுது உணர்ந்து உள்ளதாக சுயராஜ்ய நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆலையை நடத்தி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பல்வேறு அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டு, மே 2018 இல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
மேலும் அன்று போராட்டத்தில் களம் இறங்கிய உள்ளூர் மக்கள் தற்போது தங்களுடைய மனநிலையை மாற்றி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விளைவுகள் ஏற்கனவே தெரியும்! ஸ்டெர்லைட் உற்பத்தி இந்தியாவின் தாமிர தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்தது மற்றும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. பல்வேறு விதமான இளைஞர்களுக்கு தேவையான வேலை வய்ப்புகளையும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தற்பொழுதும் வழங்கி வருவது இதற்கு ஒரு முக்கிய உதாரணம் ஆகும்.
Input & Image courtesy: Swarajya