குடியரசு தின சிறப்பு விருந்தினர்: இந்திய அரசு தேர்வு செய்வது எப்படி?

இந்தியாவின் குடியரசு தின நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்க இருக்கிறார் அவரை தேர்வு செய்தது எப்படி?

Update: 2022-11-29 02:52 GMT

இந்திய குடியரசு தினம் 1950 ஆண்டுகளில் இருந்து கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவில் கலந்து கொள்வது வழக்கம். குறிப்பாக இந்தியாவிற்கும், அயல் நாட்டிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நாட்டின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது 2023 இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல்-சிசி பங்கேற்கிறார். 


ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இப்படி விருந்தினர்களை தேர்வு செய்வது குறித்து பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக மத்திய அரசின் சார்பில் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் தூதரகத்தின் அடிப்படையில் எந்த நாட்டின் பிரதமர் மற்றும் அதிபர்களை குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும்?என்பதை அறிக்கையாக அளிக்கும். அதை மத்திய அரசு ஆய்வு செய்து பிறகு அவர்களை அழைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.


இந்தியாவிற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிற்கும் இடையிலான உறவின் தன்மை மிகவும் மையமான கருத்தாகும். குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது, இந்தியாவிற்கும் அழைக்கப்பட்ட நாட்டிற்கும் இடையிலான நட்புறவின் இறுதி அடையாளமாகும். இந்தியாவின் அரசியல், வர்த்தகம், இராணுவம் மற்றும் பொருளாதார நலன்கள் இந்த முடிவின் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News