கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு குறைத்து மதிப்பிடும் அறநிலையத்துறை.. இதான் விஷயம்!

அதிக மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டு அதற்கு குறைவான மதிப்புகளை பதிவேட்டில் பதிவிடுகிறது இந்து சமய அறநிலையத்துறை.

Update: 2023-06-04 02:44 GMT

தமிழகத்தில் தான் இந்து கோவில்கள் அதிகமாக இருக்கிறது குறிப்பாக இந்தியாவில் மற்றும் மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது அதிக எண்ணிக்கையிலான கோவில்களை கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இங்கு இருக்கும் முக்காவாசி கோவில்கள் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இந்த சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகிக்கும் கோவில்களில் வருமானங்களை எடுத்து அந்த கோவிலுக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, அவற்றிலிருந்து தான் எப்படி நன்மை பெறலாம் என்பதை பார்க்க கூடாது இதுதான் பொது நீதி.


ஆனால் தற்பொழுது கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆக்கிரம்பு நிலங்களை மீட்டு எடுக்கும் இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய ஆவண பதிவேட்டில் அவற்றிற்கு குறைவான மதிப்புகளை பதிவிட்டு வருகிறது. இதன் காரணமாக கோவில்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களின் உண்மையான மதிப்பை குறைத்து காட்டுவதாக இது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக கோவில்கள் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.


அது பற்றி அவர் கூறும் பொழுது, "சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு பயண்டியம்மன் திருக்கோவில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கோவில் நிலம் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது. திருக்கோவிலுக்கு சொந்தமான 8000சதுர அடி நிலம் மீட்க பட்டு கோவிலின் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. 8000 சதுர அடி மதிப்பு என்று அறநிலையத்துறை கூறுகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நிலம் ரூ.15 கோடி. அரசாங்க மதிப்பு அதன் மதிப்பை ரூ. 2.4 கோடி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News