பள்ளியில் நிதி மோசடி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ கன்னியாஸ்திரி!

பள்ளியின் நிதியுதவி பணத்தை திருடி சூதாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ கன்னியாஸ்திரி.

Update: 2022-02-12 14:21 GMT

பெரும்பாலும் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளும் இடமாக பள்ளிக்கூடம் என்பது தெரிகிறது. அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஆல் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தில் ஒழுக்கம்தான் முக்கியத்துவம் என்பது போன்ற கூறுகிறார்கள். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் திருட்டு போன்ற பழக்கங்களை ஈடுபடக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பருவமாக குழந்தைகளின் பள்ளி பருவம் விளங்குகின்றது. ஆனால் அந்த வகையில் அதற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தற்பொழுது கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் பள்ளியின் நிதி உதவி பணத்தை திருடி சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 


கலிபோர்னியாவைச் சேர்ந்த 80 வயதான மேரி மார்கரெட் க்ரூப்பர் என்ற கன்னியாஸ்திரி, செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் முதல்வராக 10 ஆண்டுகளாக பணியில் இருந்த சமயத்தில்,சொகுசு வாழ்க்கை மற்றும் தனது சூதாடும் பழக்கத்திற்காக பள்ளி நிதி இருந்து பணம் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார். குறிப்பாக பள்ளியின் நிதி உதவி மற்றும் நன்கொடை பலர் கொடுக்கும் பணத்தில் சுமார் 8,35,000 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 6 கோடியே 23 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளார். இந்தத் அவற்றைப் பற்றி தகவல் அனைவருக்கும் தெரிந்த பின்னர் அவற்றை தான்தான் செய்வதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 


மார்க்ரெட் என்ற கன்னியாஸ்திரி தன்னுடைய தவற்றை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக இவர் தான் திருடிய பணத்தை முழுவதுமாக சூதாட்டத்தையும், ஆடம்பர வீடு மற்றும் விளையாட்டுகள் அவற்றில் முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக அங்குள்ள கலிபோர்னியா நீதிமன்றம் இவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் 8 லட்ச டாலர்கள் அபராதமும் வழங்கி உள்ளது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News