வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தெரிய வேண்டிய அடிப்படை தகவல்!
வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்.
இன்றைய காலகட்டங்களில் நிறைய வங்கிகள் தங்களுடைய நிதி நிலைமை காரணமாக மற்றொரு வங்கியுடன் இணைந்து அல்லது வங்கி திவால் ஆவது போன்ற பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். மேலும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் இதோ, நீங்கள் சாதாரண சேவிங்க்ஸ் அக்கவுன்ட் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் செய்து இருந்தாலும் சரி இந்த விஷயங்கள் உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும்.
மேலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் ஒன்று, வங்கி திவாலாகும் பொழுது வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை எப்படி திரும்பப் பெற முடியும்? என்பது தான். எனவே இது பற்றி நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம் இதற்கு மத்திய அரசும் உத்தரவாதம் அளித்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு கூறுகையில் 90 நாட்களில் அதாவது மூன்று மாதங்களுக்குள் டெபாசிட் செய்த பணத்தை திரும்ப தர வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் திவாலாகும் பொழுது வாடிக்கையாளர்கள் உடைய பணம் குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கு திரும்ப தர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மக்கள் இனி தயங்காமல் தங்களுடைய பணத்தை வங்கிகளில் முதலீடு செய்ய முடியும். மேலும் தனித்தனி கணக்குகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை காப்பீடு வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
Input & Image courtesy: News18