12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கோவிலை ஆய்வு செய்து அறிக்கை: IIT சென்னை.!
சென்னை IIT தற்பொழுது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கோயிலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணம் அருகே துக்கச்சி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர் ஆபத்சஹாயேஸ்வரர் என்றும், தாயார் சௌந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாழடைந்து கிடப்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம். எனவே இக்கோயிலை ஆய்வு செய்த சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பாதுகாப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
"நாங்கள் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வருகிறோம். டிசம்பர் இறுதிக்குள் அதை இந்து சமய அறநிலையத் துறையிடம் சமர்ப்பிக்க முடியும். அதை பற்றி ஆலோசித்து, புதிய நிதியாண்டில் அது தளத்தில் வேலையைத் தொடங்கலாம் என்பதே நோக்கம்" என்று IIT-யின் சிவில் இன்ஜினியரிங் துறையின் கட்டமைப்பு பொறியியல் குழுமத்தின் இணை பேராசிரியர் அருண் மேனன் கூறினார். மேலும் இந்தக் கோயிலைப் பற்றி மறைந்த வரலாற்றாசிரியர் R.S. பாலசுப்ரமணியத்தின் கூற்றுப்படி, "இக்கோயில் முதலாம் குலோத்துங்க மற்றும் விக்ரம சோழனுடன் நெருங்கிய தொடர்புடையது. பிரமாண்டமான ஆனால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட கோவில் பற்றி கவலை தெரிவித்த அவர், பிற்கால சோழர் காலத்தில் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியில் கோவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது" என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல், விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஒரே பெரிய கோவிலாக இது இருக்கலாம்" என்றும் பிற்கால சோழர் கோவில்கள் என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டார் என்பதும் தற்பொழுது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இந்த கோயில் தற்பொழுது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இன்று, தாராசுரம் கோயிலின் கட்டிடக்கலையை ஒத்திருக்கும் இந்தக் கோயிலுக்கு வருபவர்கள், புறக்கணிப்பு குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கும் என்பதை உணர முடியும். ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்து போனது போல் தெரிகிறது.