காங்கிரஸில் அடுத்தடுத்த திருப்பம் - குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!
காங்கிரஸில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து கொண்டு வருகின்றன அந்த வகையில் தற்போது குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த விஸ்வநாதன் வகேலா அவர் பதவி விலகி இருக்கிறார். இவருடைய இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருக்கிறது. குஜராத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இன்று இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு இடையே பெரும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தக்கோர் ஆகியோருக்கு காங்கிரஸ் இளைஞர் தலைவர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தன்னுடைய பதவி விலகல் பற்றி சில குறிப்பிட்ட அம்சங்களை தெரிவித்து இருக்கிறார் விஸ்வநாதன் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுக்கு மேலாக இருந்த குளம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று கட்சியிலிருந்து விலகினார். இந்த பரபரப்பு கிடையில் மற்றொரு நபர் காங்கிரஸிலிருந்து விலகி இருக்கிறார்.
கடந்த 2ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ரவீந்தர் பிரசாந்த் கட்சியில் அனைத்து பதவிகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பதவி விலகி இருப்பதும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்த வழக்கறிஞரான ஜெய்வீர் ஷெர்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி பதவி விலகி இருக்கிறார். குஜராத் சட்டசபை தேர்தல் ஒரு சில மாதத்தில் வர இருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் இப்படி பதவி விலகி இருப்பது கட்சிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
Input & Image courtesy:News