ஃபிட்னஸ் நிலையத்தின் உபகரணங்களை சரி பார்க்கும் பிரதமரின் வீடியோ!

பிரதமர் மோடி அவர்கள் பிட்னஸ் நிலையத்தின் உபகரணங்களை சரிபார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

Update: 2022-01-03 12:46 GMT

பிரதமர் மோடி அவர்கள் உத்தர பரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா நகரத்தில் உள்ள சாலவா மற்றும் கைலி ஆகிய இடங்களில் 700 கோடி ரூபாய்க்கு இடையில் இந்த நிறுவனம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதில் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கபடி ஆகியவற்றைத் தவிர செயற்கை ஹாக்கி மைதானம் உள்ளிட்ட நவீன மற்றும் அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் விளையாட்டு பல்கலைக்கழகம் பொருத்தப்படும்.  


மேலும் 'ஃபிட் இந்தியா' என்ற தலைப்பில் அனைவருக்கும் ஆரோக்கிய கட்டுப்பாடு முக்கியம் என்பதை வலியுறுத்தி, நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, பிரதமர் ஜிம்மிற்குச் சென்றார். மேலும் அங்கு சென்று பிரதமர் மோடி ஜிம்மில் உள்ள உபகரணங்களை முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. பிரதமர் மோடி அவர்கள் எவ்வளவு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ? அந்த அளவிற்கு அவர் யோகா செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. யோகாவை இந்தியர்கள்தான் அறிமுகப் படுத்தினார்கள் என்பதை உணர்த்தும் விதமாக யோகா தினத்தை தான் ஜூன் 21 தேதி கொண்டாடுகிறோம்.


அனைவராலும் பணம் செலுத்தி ஜிம்மிற்கு செல்ல முடியாது என்று ஒரு காரணத்தினால், இலவசமாக அதை மக்களுக்கு வழங்குவதன் மூலம் தேவையான மக்கள் பயனடைவார்கள் என்று நோக்கில் இந்த பிட்னஸ் நிலையம் அமைக்கப் பட்டு உள்ளது. எனவே அந்த மாதிரி இலவசமாக அமைக்கப்படும் உடற்பயிற்சி கூடங்கள் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.  

Input & Image courtesy: News18



Tags:    

Similar News