உக்ரைன்- ரஷ்யா போர் முடிவு எப்போது... மருத்துவ மாணவர்களின் நிலைமை என்ன... கடைசி சான்ஸ் இது!

உக்ரைனில் மருத்துவ படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் தகுதி தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-14 13:20 GMT

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகிறார்கள். இங்கு கடந்த 2022 பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து பரபரப்பான சூழலை அங்கு ஏற்பட்டது. இந்த ஒரு சமயம் அனைத்து நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக உக்ரைன் நாட்டில் இருக்கும மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். மத்திய அரசின் உதவியுடன் இந்திய மருத்துவ மாணவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டார்கள். அதனை தொடர்ந்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களுடைய மருத்துவப் படிப்பை தொடர முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


அந்த மாணவர்களை இன்றை அவருக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வந்ததே பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. இந்நிலையில் போர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ஓராண்டு நீடித்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. உக்கரையில் மருத்துவ படிப்பை தொடர முடியாத இந்திய மாணவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டு இருந்தது. அதாவது எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒரு முறை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி மருத்துவம் படிப்பில் இறுதி ஆண்டில் இருக்கும் மாணவர்கள் இந்தியாவில் ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும்.


அதில் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் மருத்துவ படிப்பை முடித்ததாக கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை செயலாளர் அங்கு பயணம் மேற்கொண்டு இருந்த பொழுது அங்கு இருக்கும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. எனவே உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத 20,000 இந்திய மாணவர்கள் இந்தியாவில் இந்த தேர்வு ஒருமுறை மட்டும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News