பஸ்ஸுக்கு டிக்கெட் ப்ரீதான் - ஆனா பைன் 100 ரூபாய், போக்குவரத்து கழகத்தின் குளறுபடி

ராசிபுரம் அரசு பஸ்ஸில் இலவச டிக்கெட்டைத் தொலைத்த பெண்ணுக்கு ரூ.100 அபராதம்.பரிசோதகர் கேட்கும் வீடியோ வைரல்.;

Update: 2022-08-02 08:00 GMT

அரசு பஸ்சில் இலவச டிக்கெட்டை தொலைத்ததால் பெண்ணிடம், 100 ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி பரிசோதகர் வற்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பஸ்களை நிறுத்தி நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.அப்போது ஆர்.12 என்ற அரசு டவுன் பஸ் சேலத்தில் இருந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் வந்தது.அதில் சோதனையிட்ட பரிசோதகரிடம் சித்ரா என்ற பெண் மகளிருக்கு இலவசம் என்ற பயணச்சீட்டை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார். இதற்கு 100 ரூபாய் அபராதம் கட்டும் படி பரிசோதகர் வற்புறுத்தியுள்ளார் செய்வதறியாமல் தவித்து அங்கிருந்தவர்கள் அரசு இலவச மென அறிவித்துள்ளது.

பயணச்சீட்டை தொலைத்து இருந்தாலும் இலவசம் தானே எனக்கூறி பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் கலந்து கொண்டு பரிசோதகர் அங்கிருந்து சென்றுவிட்டார் இந்த விவகாரத்தை வேகமாக செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அது தற்போது வேகமாக பரவி வருகிறது இது குறித்து கூறுகையில் எத்தனை பேர் இலவச பயணம் செய்கிறார்கள் என்பதற்காகவே சீட்டு வழங்கப்படுகிறது. அதனை பத்திரமாக வைத்திருந்தால்தான் அரசுக்கு கணக்கு காட்ட முடியும் என்றார்.



இமேஜ் - பாலிமர்

சோர்ஸ் - தினத்தந்தி




 






Similar News