கலெக்டர் வாகனத்திற்க்கே இந்த நிலையா? தி.மு.க ஆட்சியில் சாலைகள் குளமான அதிசயம்!

குமரி மாவட்ட ஆட்சியரின் கார் மழையால் பாதிக்கப்பட்ட சாலையில் புதைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-11-10 12:08 GMT

குமரி மாவட்ட ஆட்சியரின் கார் மழையால் பாதிக்கப்பட்ட சாலையில் புதைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு பணிகளுக்காக கிராமங்களுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது கடுக்கரை ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் சென்றார். ஆய்வுகளை முடித்து திரும்பிவரும் வேளையில் சாலை வசதி சரியாக இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி இருந்ததில் மாவட்ட ஆட்சியர் வாகனம் மாட்டிக்கொண்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை விட்டு இறங்கி பின்னர் டெம்போவில் கயிறு கட்டிய மாவட்ட ஆட்சியரின் வாகனம் மீட்கப்பட்டது. நடுரோட்டில் குளம் போல் தேங்கி கிடக்கும் சாலையில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் மாட்டிக்கொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் திமுக ஆட்சியில் சாலைகளின் வசதி எப்படி இருக்குது பார்த்து கொள்ளுங்கள் என சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.



Source - Junior vikatan

Similar News