வெளிநாட்டு விரோத சக்திகளுடன் ராகுல் காந்தி கைகோர்ப்பு: பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கும் ஜே.பி.நட்டா!

வெளிநாட்டு விரோத சக்திகளுடன் ராகுல் காந்தி கைகோர்த்து இருக்கிறார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கும் ஜே.பி.நட்டா

Update: 2023-03-19 01:58 GMT

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே பி நட்டா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சதிகாரர்களுடன் ராகுல் காந்தி கைகோர்த்து இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். குறிப்பாக இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா தற்பொழுது ஏற்றியிருக்கிறது. இந்த நேரத்தில் வெளிநாட்டு மண்ணில் குறிப்பாக அந்நிய நாடுகளில் இந்தியாவை இழிவுபடுத்தும் விதமாக ராகுல் காந்தி நடத்திக்கொண்டு இருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று அவர் கூறி ஐரோப்பிய, அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையிட்டு கோருவது பெரும் வெட்கக்கேடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இங்கிலாந்து நம்முடைய நாட்டை ஆண்டது, அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளின் தலைமையின் தலையீடுகளை கோருவது மிகவும் துரதிஷ்ட வசம் ஆனது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ராகுல் காந்தி தற்பொழுது தாக்குதலில் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார். இந்திய விரோத சக்திகளுக்கு இந்தியாவில் வலிமையான அரசு இருந்தாலே பிரச்சனை தான் நிர்பந்தத்தின் கீழ் செயல்படும்.


பலவீனமான கூட்டணி அரசியல்வாதிகளை அவர்கள் விரும்புவார்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் அரசை ஆட்டி வைப்பார்கள். ஆழமான சக்தியின் ஒரு அங்கமாக காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் அந்நிய சக்திக்கு துணை போய் இருக்கும் நிலைமையை ஏற்படுத்துவிட்டது இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:  Maalaimalar

Tags:    

Similar News