மோடி அய்யாவுக்கு நன்றி! தி.மு.க அரசால் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி உருக்கம்!
பழங்குடியினத்தவர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டோரை சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவ மக்கள் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நரிக்குறவ பெண் அஸ்வினி பேசுகையில் , வணக்கம் என் பேரு அஸ்வினி, மகாபலிபுரம் பூஞ்சேரி கிராமத்தில் இருந்து பேசுகிறேன். மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியின பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய 60 ஆண்டு கால கனவு.
எங்கள் குலத்து பிள்ளைகள் படித்திருந்தாலும் அவர்களுக்கு அரசு வேலையோ அரசு சலுகைகளோ கிடைக்கவில்லை. இதனால் படித்த படிப்பு வீணாகிவிட்டதே என சும்மா உட்கார்ந்திருந்தார்கள். எம்பிசியிலிருந்து எஸ்டிக்கு மாற்றுமாறு எங்கள் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
இதனால் எங்கள் வேலைகள் கிடைக்கும் என எங்கள் சமூகத்து மக்கள் நம்புகிறார்கள். எங்கள் சமூகத்து குழந்தைகள் உயர் கல்விக்கு செல்வார்கள், அரசு வேலைகளில் அமருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. பழங்குடியினர் பிரிவுக்கு எங்கள் சமூகத்தை மாற்றி கொடுப்பதாக அறிவித்த மோடி அய்யாவுக்கு மீண்டும் நன்றி என்றார்.
நரிக்குறவ பெண் அஸ்வினி ஏற்கனவே திமுக அரசால் இலவச வீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, அதனை நம்பி பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஏமாற்றப்பட்டார். கடந்த மாதம் கலெக்டரிடம் சென்று தனக்கு வீடு வழங்கப்படவில்லை என புகார் கூறியிருந்தார்.