தமிழக மக்களுக்கு ராமர் யாருன்னே தெரியாது - வெளிப்பட்ட ஜோதிமணியின் அப்பட்டமான பொய்
எம்பி.ஜோதிமணி தனியார் ஆங்கில தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்த பேட்டியில், "நான் கிராமத்தில் உள்ள எங்கள் கோவிலுக்கு வாரம்தோறும் செல்வதுண்டு. அது எங்கள் மூதாதையர் கோவில். எங்களுக்கு ராமர் என்றால் யாரென்றே தெரியாது. தமிழகத்தில் எங்குமே கோவில் கிடையாது. தமிழக மக்கள் யாரிடம் கேட்டாலும் ராமர் என்றால் யாரென்று தெரியாது. தேசிய அரசியலில் நுழைவதற்கு முன்னர்தான் ராமாயணம் மஹாபாரதம் போன்றவற்றை படித்தேன். அதன்பிறகே அந்த கதாபாத்திரம் பற்றி தெரியும்" என வண்டி வண்டியாக பொய் மூட்டைகளை இறக்குமதி செய்தார்.
ஜோதிமணியின் சொந்த ஊரான கரூர் அருகே கூட ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. சேலத்தில் பிரமாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அரசியல் ஆதயத்திற்காக பொதுவெளியில் உலகறிய பொய்யான விஷயத்தை பேசுவது தமிழக அரசியலின் தரத்தை குறைப்பதாக உள்ளது.
அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் உட்பட பலர் ஜோதிமணியை விமர்சித்து வருகின்றனர்.