கண்ணகி கோவிலை தாரை வார்க்க இந்து சமய அறநிலையத் துறை முயற்சியா?
கண்ணகி கோவிலை தாரை வார்க்க இந்து சமய அறநிலைத்துறை முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் வண்ணாத்தி பாலை வனப்பகுதியில் வரலாற்று தன்மை வாய்ந்த கண்ணகி மங்கள தேவி கோவில் ஒன்று உள்ளது. குறிப்பாக இந்த கண்ணகி தேவியை வழிபடப் பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். திராவிடம் மாடல் என தமிழர்களை ஏமாற்றும் தி.மு.க அரசு தற்போது இந்த கண்ணகியின் மங்கள தேவி கோவிலை கேரளா மாநிலத்திற்கு தாரை வார்க்க அறநிலையத்துறை வழியாக உதவி புரிகிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கண்ணகி மங்களாதேவி கோவிலை கேரளாவிற்கு தாரை பார்க்க முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது குற்றச்சாட்டை இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அவர்கள் முன்வைத்து இருக்கிறார். இந்து அறநிலையத்துறையின் சார்பில் கூடுதல் கமிஷனர் திருமகள் செயல் அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சிற்றறிக்கையில், மங்கள தேவி கண்ணகி கோவில் துறை கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியுள்ளார். இதன் வழியாக கேரளா மாநிலத்திற்கு கண்ணகி கோவிலை தாரை வார்க்க தி.மு.க அரசு உதவி செய்கிறது. டிஜிட்டல் ரீ சர்வே என்ற மோசடியை கேரள அரசு திட்டமிட்ட அரங்கேற்று வரும் இந்த ஒரு நேரத்தில், அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு கேரளாவிற்கு கண்ணகி கோவிலை கொண்டு போய் சேர்த்து விடும் என்பதை தமிழக அரசு ஏன் உணர்ந்து இருக்கவில்லை? என்று கேள்வியும் எழுந்து இருக்கிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பர நடராஜர் கோவிலை துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை செய்து வரும் அமைச்சர், கண்ணகி கோவில் விசயத்தில் மௌனம் காப்பது ஏன்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களும் நம்முடைய மனதில் எழுகிறது. கண்ணகி கோவில் இந்து சமய அறநிலையை துறையின் கீழ் உள்ளதா? இல்லையா? என்பதை தமிழக அரசு நிச்சயம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி தலைவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar