எங்க கடவுள் ஒசத்தி! உங்க கடவுள்? கன்னியாகுமரி அரசு பள்ளியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியை - வகுப்பில் கிறிஸ்தவ மத பிரார்த்தனை செய்ய வற்புறுத்தல்!

மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ஆசிரியை மீது மாணவி புகார்

Update: 2022-04-13 09:30 GMT

கன்னியாகுமரி, கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

வகுப்பில் கிறிஸ்தவ மதபிரார்த்தனைகளை மேற்கொள்ள சொல்லி வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடமும் இதே போல நடந்து கொண்டார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தெரிவித்தனர். 

இரணியல் போலீசார் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தினர். மாணவிகள் ஆசிரியை குறித்த குற்றச்சாட்டை வாக்குமூலமாக அளித்தனர். தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி கண்ணாட்டு விளை அரசு பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியை விசாரிக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தபின்பு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இந்நிலையில் கண்ணாட்டு விளை அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக தையல் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Similar News