இஸ்லாமிய வாக்காளர்களிடம் கர்நாடக பா.ஜ.க எம்,எல்,ஏ ஓட்டு கேட்கும் வீடியோ வைரல்!
இஸ்லாமிய மக்களை என்னுடைய சகோதரர்களாகவே பார்க்கிறேன் எதிர்காலத்திலும் அவ்வாறு பார்ப்பேன் என்று கூறி கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஓட்டு கேட்கும் வீடியோ வைரல்.
சமூக வலைதளத்தில் மக்கள் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அந்த வீடியோக்கள் பல்வேறு தரப்பினரையும் சென்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஓட்டு கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நான் இதுவரை இஸ்லாமியர்களை என் சகோதரர்களாகவே பார்க்கிறேன். எதிர்காலத்திலும் அவ்வாரை பார்ப்பேன் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ பரதீப் என்பவர் கூறுகிறார்.
இவருடைய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக ஏற்கனவே பா.ஜ.க மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் களமிறங்கி விட்டார்கள். இந்த நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ பரதீப் கவுடா என்பவர் கர்நாடகாவில் ஸ்ரீ நகரில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களை தனக்கு ஓட்டு சேகரிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் நான் இதுவரை இஸ்லாமியர்களை என் சகோதரர்களாகவே பார்க்கிறேன் எதிர்காலத்திலும் அவ்வாறு பார்ப்பேன், நான் உங்களுக்கு ஒரு உதவி செய்தால் மறுபடியும் என் சகோதரர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.
எனவே எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது என்பது போன்ற அவர் பதிவிட்டு இருக்கிறார். நடந்து முடிந்த மூன்று தேர்தல்களில் நீங்கள் எனக்கு வாக்களிக்காமல் ஏமாற்றி விட்டீர்கள். ஆனால் ஆறு மாதத்தில் மீண்டும் வரவிருக்கும் தேர்தலை எனக்கு ஓட்டு அளித்தால் நிச்சயம் உங்களுக்கு அதை இரட்டிப்பாக திரும்ப கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தண்ணீர், சாலை, வடிகால் போன்று பணிகளை மேற்கொள்வது என்னுடைய கடமை தனிப்பட்ட வேலைகளை எதுவும் செய்து தர மாட்டேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: Vikatan