விவசாயின் தோற்றத்தை வைத்து எடைபோட்ட ஷோரூம் பிரதிநிதி: ஒரு மணி நேரத்தில் நடந்த மாற்றம்!
விவசாயின் தோற்றத்தை வைத்து கார் வாங்க மாட்டார் என்று முடிவு செய்த பிரதிநிதி அவரை அவமானப்படுத்தி உள்ளனர்.
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி கெம்பேகவுடா. இவர் ஒரு கார் வாங்க வேண்டும் என்ற நோக்கில் மாருதி ஷோரூம்க்கு சென்றுள்ளார். ஆனால் அந்த ஷோரூம்களில் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதி ஒருவர், விவசாயின் தோற்றத்தை பார்த்து அவர் கார் வாங்க வந்ததாகத் தெரியவில்லை என்ற நோக்கில் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். அவர் சரக்கு வாகனம் வாங்க வேண்டும் என்று கூறி அவற்றின் விலை என்னவாக இருக்கும் என்று அந்தப் பிரதியின் விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கடுமையான முறையில் பதில் அளித்துள்ளார்.
நார்மலான விவசாயின் உடையில் சென்ற அவரிடம், காரின் விலை 10 லட்சம் வரை இருக்கும். ஆனால் உன் சட்டைப்பையில் பத்து ரூபாய்கூட இருக்காது என நினைக்கிறேன் என்று நக்கலாக பதிலளித்துள்ளார். மேலும் விவசாய தான் கார் வாங்க வந்துள்ளதாகதான் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட பிறகும் அவர் அவருடைய தோற்றத்தை வைத்து அவரிடம் பணம் இருக்காது என்று முடிவு செய்து கொண்டு, அவரிடம் மேலும் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். பிறகு கோபமடந்த விவசாயி, தான் இன்னும் ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துடன் வந்து இந்த காரை வாங்குகிறேன். ஆனால் உன்னால் ஒரே நாளில் இதை எனக்கு டெலிவரி பண்ண முடியுமா? என்று ஒரு சவாலை முன்வைத்துள்ளார்.
பிறகு அவர் சொன்னதைப் போல ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துடன் வந்து ஷோரூம் பிரதிநிதி விற்பனையாளரை மிரள வைத்துள்ளார். ஒரே நாளில் டெலிவரி உங்களை டெலிவரி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு தன் தவற்றை உணர்ந்த விற்பனையாளர், அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். எனவே இது தொடர்பாக ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது எனவே ஒருவர் உருவத்தைப் பார்த்து அவர்களை எடை போட வேண்டாம் என்று தெரிய வருகிறது.
Input & Image courtesy: News 18