திப்புசுல்தான் பற்றி கருத்து: இந்து இளைஞரை ஆயுதத்துடன் தாக்கிய கும்பல்!

சமூக வலைத்தளங்களில் திப்புசுல்தான் குறித்து கருத்து தெரிவித்த இந்து இளைஞனை ஆயுதங்களுடன் தாக்கிய கும்பல்.

Update: 2022-02-21 14:28 GMT

கர்நாடகாவின் பாகல்கோட்டில் திப்பு சுல்தான் குறித்த சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்ததற்காக இந்து இளைஞர் ஒருவரை ஆயுதங்கள் உடன் வந்த கும்பல் திடீரென தாக்கியது. பிப்ரவரி 19 அன்று பிரகாஷ் லோனாரே என்ற இளைஞன் ஒருவன், திப்பு சுல்தான் குறித்து பதிவு இருக்கு தன்னுடைய கருத்தை ஒரு 'ஸ்மைலி எமோஜி' வழியாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரைத் தாக்கிய 20 பேர் கொண்ட ஆத்திரமடைந்த கும்பலைத் தூண்டியது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 


18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னருள் ஒருவனான திப்புசுல்தான் அன்றைய காலகட்டங்களில் இந்து மக்களை கொடுங்கோல் ஆட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்றளவும் கர்நாடகாவில் பல மக்கள் திப்பு சுல்தானே உயர்ந்த அரசர்கள் ஒருவராக கருதுகிறார்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள். பிப்ரவரி 19, சனிக்கிழமை இரவு, 20 பேர் கொண்ட கும்பல் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் பிரகாஷ் லோனாரே என்ற இளைஞரைத் தாக்கியது. மேலும் அங்குள்ள உள்ளூர் பத்திரிக்கையாளர் சோமசேகர் கருத்துப்படி, "திப்பு சுல்தான் பற்றிய ஒரு பதிவில் பிரகாஷ் ஸ்மைலி எமோஜியுடன் கருத்து தெரிவித்திருந்தார். இது அவரது ஆதரவாளர்களை கோபப்படுத்தியது.


இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பிரகாஷை எதிர்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கினர். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட்டில் இந்து இளைஞர் பிரகாஷ் லோனாரே நேற்று வாள்களால் தாக்கப்பட்டதில், அவரை அப்பகுதியைச் சேர்ந்த MLA வீரண்ணா சாரந்திமாதா, பிரமோத் முத்தாலிக் ஆகியோர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர். 

Input & Image courtesy: Opindia Naws

Tags:    

Similar News