கடலுக்கடியில் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாட்டம் ! ஆழ்கடல் வீரரின் அசத்தல் செயல் !
இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, ஆழ்கடலில் மூவர்ணக் கொடியை ஏற்றி சாதனை புரிந்த ஆழ்கடல் வீரர்.;
இன்று இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் வீரர்கள் வங்கக் கடலின் அடியில், நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர். இது மற்றொரு சிறப்பு வாய்ந்த விஷயமாக அமைந்துள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் தேசியக் கொடியை ஆழ்கடலில் ஏற்றி வைக்கும் நிகழ்வின் மூலம், இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆழ்கடல் வீரரான அரவிந்த் அவர்கள் கூறுகையில், "கடல் என்பது தேசிய சுரங்கம். நமது நாட்டையும், தேசியக் கொடியையும் நேசிக்கிறோம். இரண்டையும் ஒன்று சேர்க்க, இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும் என்று கூறினார். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, ஆழ் கடல் வீரர்கள் குழுவாக வங்கக் கடலில் 5 கிமீ தூரம் பயணித்துள்ளனர். அங்கிருந்து 60 அடி ஆழத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளனர். பின்னர் அதனை பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்துள்ளனர். காற்றில் அசைந்தாடும் கொடியை போல், நீரிலும் அசைந்து கொடுத்த கொடியை பார்க்கையில் உணர்ச்சி பொங்கும் தருணமாக இருக்கிறது.
இவ்வாறு 30 நிமிடங்கள் கடலுக்கு அடியில் சாகசங்களில் ஈடுபட்டனர். ஆழ்கடலில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேசியக் கொடியுடன் ஆழ்கடலில் வலம் வருவது சாதாரண காரியம் அல்ல. இதற்கு நிறைய பயிற்சி தேவை. நாங்கள் மிகவும் தந்திரமாக செயல்பட்டுள்ளோம். இதேபோல் புதிதாக ஏராளமான விஷயங்களை கடலில் அரங்கேற்ற உள்ளோம்" என்றும் அவர் கூறினார்.
Input: https://youtu.be/nVEl6hndSfo
Image courtesy: Dinamalar news