பேக்கிரி பொருட்களால் உருவான கேரளாவின் தெய்யம் முகம்: கலைஞரின் அற்புதப் படைப்பு.!

பேக்கிரி பொருட்களால் உருவான கேரளாவின் தெய்யம் முகம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2021-10-14 13:22 GMT

தெய்வம் என்ற சொல்லில் இருந்து தெய்யம் என்ற சொல் உருவானது என்று கூறப்படுகிறது. தெய்யம் முகம் என்பது கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கேரளாவைச் சேர்ந்த கன்னூரில் உள்ள ஒரு பேக்கரியின் ஹாலில், இந்த கலைநயம் மிக்க, நேர்த்தியான தெய்யம் முகத்தை கைவினைக் கலைஞர் ஒருவர் மிகவும் கச்சிதமாக உருவாக்கியுள்ளார். இதை உருவாக்க, வெவ்வேறு நிறங்கள் மற்றும் அளவுகளில் கிட்டத்தட்ட 25,000 பிஸ்கெட்டுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெய்யம் என்பது கேரள நாட்டின் பாரம்பரியங்களில் ஒன்று. பலருக்கும் தெய்யம் என்றால் என்ன என்பதை சட்டென்று உணர்ந்திட முடியாது. 


குறிப்பாக கேரள நடனக் கலைகளை அறிந்திருந்தால், தெய்யம் எவ்வளவு நுணுக்கமான கலை என்பதை சுலபமாக உணரலாம். தெய்யம் என்பது கேரளாவின் முக்கியமான, பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்றாகும். இது குறிப்பாக, வடக்கு கேரளாவில், மலபார் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. தெய்யம் என்ற கலையின் சாராம்சம் முக ஒப்பனையில் தான் இருக்கிறது. அந்த தெய்யம் முகத்தை தான், கேரளக் கலைஞர் பேக்கரி பொருட்களை வைத்து 24 அடி நீளத்தில் உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


டாவின்சி சுரேஷ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் அந்த கலைஞர், தெய்யம் முகத்தை உருவாக்க 15 மணிநேரம் தான் எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார். டாவின்சி சுரேஷ் பல்வேறு கலைப்பொருட்களைப் பயன்படுத்தி, இந்த கலையை உருவாக்கியுள்ளார். இந்த கலை வடிவம், பேக்கரியில் தயாரிக்கப்பட்டது. இதை முழவதுமாக செய்து முடிக்க நண்பர்கள் பலரும் உதவினார்கள் என்று தெரிவித்தார். அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்ட பேக்கரி பொருட்களால் உருவாக்கப்பட்ட தெய்யம் முகம், பின்னர் மக்குவதற்காக கால்நடை பண்ணையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:News18




Tags:    

Similar News