ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை தொடர்புபடுத்தி போலி செய்தி வெளியிட்ட கேரளா யூடியூப் சேனல் - விரையும் தமிழக காவல்துறை!

Kerala-based YouTube channel under lens over fake news on crash that killed CDS Bipin Rawat and 12 others

Update: 2021-12-13 08:05 GMT

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத் இறந்ததைத் தொடர்ந்து போலியான செய்தியை ஒளிபரப்பியதாக கேரளாவைச் சேர்ந்த யூடியூப் சேனல் மீது கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நகர காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

நீலகிரி மற்றும் கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெறும் மூன்று நிமிட வீடியோவை அந்த சேனல் வெளியிட்டது. அந்த வீடியோவில் மாணவர்கள் ஜெனரல் ராவத்தின் மரணத்தைக் கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டியது. இந்த வீடியோ வைரலானதையடுத்து போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தினர்.

விபத்திற்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 7ஆம் தேதி வீடியோ எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து நடந்த நாளுக்கு, முந்தைய நாள் விடுதி மாணவர்களால் ஃப்ரெஷர்ஸ் டே கொண்டாடப்பட்டது. அந்த வீடியோ தான் வைரலானது என்று கல்லூரி நிர்வாகம் தெளிவுபடுத்தியது.

எங்கள் மாணவர்களை மோசமாக சித்தரிக்கவும், கல்லூரி நற்பெயரைக் கெடுக்கவும் சில ஆன்லைன் சேனல்களால் வதந்திகளை பரப்பப்படுகின்றன. ஜெனரல் ராவத் மற்றும் 12 பேரின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும், நாங்கள் டிசம்பர் 9 ஆம் தேதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தோம் என்று கல்லூரி ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. யூடியூப் சேனல் தவறான வீடியோவை ஒளிபரப்பியதை போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அடுத்து கேரள காவல்துறையின் ஆதரவுடன், அந்த சேனலுக்கு எதிராக விசாரணைதொடங்கப்படவுள்ளது.


Tags:    

Similar News